சித்திரவதைகளுக்கெதிரான ஐநா குழுக் கூட்டத்தில் சிறீலங்கா விவகாரம்!

349 0

eu_flag_spifஜெனீவாவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள சித்திரவதைகளுக்கெதிரான ஐநா குழுக் கூட்டத்தில் சிறீலங்கா விவகாரம் மீளாய்வு செய்யப்படவுள்ளது.

நவம்பர் 7ஆம் திகதி தொடக்கம் டிசெம்பர் 7ஆம் திகதிவரை சித்திரவதைகளுக்கெதிரான ஐநா குழுக் கூட்டம் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் சிறீலங்கா உட்பட பல்வேறு நாடுகள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது. எதிர்வரும் 15, 16ஆம் திகதிகளில் சிறீலங்கா நிலமைகள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.

சித்திரவதைகளுக்கு எதிரான பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ள 159 நாடுகள் இதில் பங்கேற்கவுள்ளன.

சித்திரவதைகளுக்கு எதிரான ஐநா குழுவில் இடம்பெற்றுள்ள 10 சுதந்திர நிபுணர்கள், இந்தக் கூட்டத்தில் நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில், நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் சுதந்திர நிபுணர்களின் அவதானிப்புகளை உள்ளடக்கியதுமான அறிக்கை வெளியிடப்படவுள்ளது.