புத்தளத்தில் நிலக்கரி மின்நிலையத்திற்கு (லக்விஜய) உடனடியாக நிலக்கரியை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி இந்த வாரம் முதல் இரண்டு சிங்கப்பூர் நிறுவனங்களின் மூலமாக நிலக்கரியை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதானி குளோபல் பி.டி. லிமிடெட் 16.1 மில்லியன் அமெரிக்க டொலர் (ரூ .2.9 பில்லியன்) செலவில் 240,000 மெட்ரிக் தொன் நிலக்கரியை வழங்கும் ஏலத்தை வென்றுள்ளது.
அத்தோடு சுவிஸ் சிங்கப்பூர் ஓவர்சீஸ் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் 66.7 மில்லியன் டொலர் (ரூ. 12.9 பில்லியன்) செலவில் 1.1 மெட்ரிக் தொன் நிலக்கரியை வழங்க நீண்ட கால குத்தகையின் அடிப்படையில் ஏலத்தை வென்றுள்ளதாக மின் சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தை மின், எரிசக்தி மற்றும் வணிக மேம்பாட்டு அமைச்சர் ரவி கருணநாயக்க தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

