முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஒரு செல்லாக்காசு என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க விமர்சித்துள்ளார்.
ஹட்டனில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், “முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அனைத்துச் சந்தர்ப்பத்திலும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராகவே செயற்பட்டார்.
சந்திரிகா ஜனாதிபதியாகுவதற்கு முன்பாக அவரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்து உறுப்பினர்களும் அவருக்கு எதிராகவே அன்று செயற்பட்டனர்.
அவரை ஆதரித்து கட்சிக்குள் இணைத்துகொள்ள வேண்டும் என நானும் மங்கள சமரவீரவும் மாத்திரமே பாடுபட்டோம்.
இவ்வாறாக அனைவராலும் வெறுக்கப்பட்ட சந்திரிகா ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக செயற்படுவது ஒரு பெரியவிடயமாக கருத முடியாது.
அன்று முதல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைவிட மாற்று கட்சியினருக்கு இவர் தனது ஆதரவை வழங்கி வந்துள்ளார் என மேலும் தெரிவித்தார்.

