நாடளாவிய ரீதியில் அனைத்து எரிவாயு விற்பனை நிலையங்களையும் நுகர்வோர் சேவைகள் அதிகார சபை சோதனையிடவுள்ளது.
கடந்த சில நாட்களாக சில எரிவாயு விற்பனை நிலையங்களில் அதிக விலைக்கு எரிவாயு விற்பனை செய்யப்படுகின்றமை மற்றும் எரிவாயு மறைத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இவ்வாறு சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக 500க்கு மேற்பட்ட எரிவாயு விநியோக முகவர்களிடையே சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாடளாவிய ரீதியில் அனைத்து எரிவாயு விற்பனை நிலையங்களையும் நுகர்வோர் சேவைகள் அதிகார சபை சோதனையிடவுள்ளது.
சவுதி அரேபியாவின் இரண்டு எரிபொருள் களஞ்சியங்களின்மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமான குண்டுத் தாக்குதலின் காரணமாக எரிவாயுவை இறக்குமதி செய்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளமையினால், கடந்த சில தினங்களில் சந்தையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்த நிலையில், எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்ததைத் தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் சமையல் எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

