ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நாளை சந்தைக்கு விநியோகம்

273 0

நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை நீக்கும்  வகையில் ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை நானை விநியோகிக்கப்படும் என  நிதியமைச்சு  தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே  போதுமான  அளவு  எரிவாயு  சிலிண்டர்கள்  சந்தைக்கு  விடப்பட்டிருப்பதாகவும்  இதனால்  சமையல்  எரிவாயுதட்டுப்பாடு  ஓரளவு  குறைந்திருப்பதாகவும்  நிதியமைச்சு  மேலும்  தெரிவிக்கின்றது.

3500 மெட்ரிக் தொன்  சமையல்  எரிவாயுவை  சந்தைக்கு  விட  நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகின்றது. ஒரு சில  வர்த்தகர்கள்  சமையல்  எரிவாயுவை  பதுக்கி  செயற்கையான  தட்டுப்பாட்டை  ஏற்படுத்த முயல்கின்றனர்.  இவ்வாறான 45வர்த்தகர்களை  ஏற்கனவே  நுகர்வோர்  அதிகாரசபை  பொலிசாரின் உதவியுடன் கைது செய்துள்ளனர்.