வத்தளை பகுதியில் 650 வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றை கலால் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் சோதனைக்குட்படுத்தியபோதே மேற்படி மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த காரின் உரிமையாளர் போதைப்பொருள் வியாபாரி எனவும், மதுபான போத்தல்களை கொள்வனவு செய்வதற்காக வந்த மேலும் மூவரையும் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

