ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகிக்கும் நடவடிக்கை 75 வீதம் பூர்த்தியடைந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 25 ஆம் திகதி முதல் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பமானது.
அதற்கான விசேட தினமாக நேற்று முன்தினம் விநியோக நடவடிக்கைகள் இடம்பெற்றதுடன் எதிர்வரும் 9 ஆம் திகதி இந்த நடவடிக்கைகள் நிறைவுக்கு வரவுள் ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

