அன்னத்துக்கு வாக்களித்து சுதந்திரத்தை மீளப் பெற்றுக்கொள்ளுங்கள் – அகிலவிராஜ்

248 0

சஜித் பிரே­ம­தா­சவை வெற்­றி ­பெற செய்­வ­தற்­காக ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் அனை­வரும் பெரும் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்பட்டு வரு­கின்­றனர். 1988ஆம் ஆண்­டுக்குப் பின்னர் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு கிடைக்­காத அரச தலை­மைத்­து­வத்தை சஜித் பிரே­ம­தாச இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்­றி­கொள்­வதன் ஊடாக மீளப் பெற்­றுக்­கொள்ள  முடியும் என ஐக்கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார்.

 

ஜனா­தி­பதித் தேர்­தலை முன்­னிட்டு நேற்று திங்­கட்­கி­ழமை குளி­யா­பிட்­டிய  தேர்தல் தொகு­தியில்  நடை­பெற்ற பிர­சாரக் கூட்­டத் தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அமைச்சர் மேலும் உரை­யாற்­று­கை யில்,

ஜனா­தி­பதித் தேர்­தலில் சஜித் பிரே­ம­தா­சவை வெற்­றி ­பெறச் செய்­வ­தற்­காக ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் அனை­வரும் பெரும் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்பட்டு வரு­கின்­றனர். ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி அடைந்தால் ஜனா­தி­பதி, பிர­தமர், அமைச்­ச­ர­வைக்­கான அமைச்சுப் பத­விகள் ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்குக் கிடைக்கும்.

ஐக்­கிய தேசியக் கட்­சியில் காணப்­பட்ட கருத்து முரண்­பா­டுகள் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்டு அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்ட பின்னர் அவ­ரது வெற்­றிக்­காக அனை­வரும் பூரண ஒத்­து­ழைப்­புடன் செயற்­பட்டு வரு­கின்­றனர். ஜனா­தி­பதித் தேர்தல் வெற்­றியின் பின்னர் அடுத்த ஐந்து வருட அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை வேக­மா­கவும் வெற்­றி­க­ர­மாகவும் முன்­னெ­டுப்­ப­துடன் தற்­போ­துள்ள சுதந்­தி­ர­மான சூழலை மீளவும் பெற்­றுக்­கொள்ள முடியும்.

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான வெற்­றிக்­காக கட்சி, பேதங்கள் பாராமல் கட்­சிகள் மற்றும் சிவில் அமைப்­புகள் 47 அன்னம் சின்னம் ஆத­ரவு வழங்க ஒப்­பந்­தங்கள் கைச்­சாத்­திட்­டன.  எனினும் ராஜ­பக் ஷ குடும்­பத்­தி­னரை ஆட்­சிக்குக் கொண்டு வந்து அவர்­க­ளது தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்கு எதி­ரான அனைத்து முற்­போக்கு சிந்­தனை கொண்­ட­வர்­களும் ஒன்­றி­ணைய வேண்டும்.

2015 ஆம் ஆண்டு எமது அர­சாங்­கத்தை நிறு­வி­னாலும் எமக்­கென்று ஜனா­தி­பதி ஒருவர் இருக்­க­வில்லை. அன்னம் சின்­னத்தில் வெற்றி பெற்று பக்­க­ச்சார்பு இல்­லாத ஜனா­தி­ப­தி­யாக இருப்­ப­தாக மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­னாலும் அவர் அவ்வாறு செயற்படவில்லை.  நாம் பல்வேறு இடை யூறுகள் மத்தியில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் சென்றோம். எனவே கட்சி பேதங்கள் பராமல் சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச் செய்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.