வாக்காளர் அட்டை விநியோகிக்கும் நடவடிக்கை 75 வீதம் பூர்த்தி

309 0
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகிக்கும் நடவடிக்கை 75 வீதம் பூர்த்தியடைந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 25 ஆம் திகதி முதல் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பமானது.

அதற்கான விஷேட தினமாக நேற்று விநியோக நடவடிக்கைகள் இடம்பெற்றதுடன் எதிர்வரும் 9 ஆம் திகதி இந்த நடவடிக்கைகள் நிறைவுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு பின்னரும் எவருக்கேனும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்கவில்லை எனின் அவர்களின் தபால் நிலையங்களுக்கு சென்று அடையாளத்தை உறுதி செய்து அதனை பெற்றுக் கொள்ள முடியும் என தபால் மாஅதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.