பாதள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவராக கருதப்படும் அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முல்லேரியா பகுதியில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட நபர் அருண சமீர எனவும், இவர் அங்கொட லொக்காவுக்காக கப்பப் பணம் சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

