ரவிராஜின் வழக்கு 22ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

291 0

ravirajதமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கை தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏழு பேர் கொண்ட சிறப்பு அறங்கூறுனர் சபையினால் இந்த மாதம் 22ஆம் திகதி முதல் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கவுள்ளன.

கொழும்பு மேல் நீதிமன்றம் இதனை இன்று அறிவித்துள்ளது.

இந்த வழக்கில் ஆறு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவர்களில் 3 பேர் வெளிநாடுகளில் வசிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரதிவாதிகளின் கோரிக்கை அடிப்படையில் இந்த வழக்கு சிறப்பு அறங்கூறுனர் சபைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.