கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி நாட்டுக்கு சட்ட விரோதமாகக் கொண்டு வரப்பட்ட சிகரட்டுக்கள் இன்று இலங்கை சுங்க திணைக்களத்தின் விசாரணைப்பிரிவினால் அழிக்கப்பட்டது.
இவற்றில் 26 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 5200 சிகரெட்டுகள் காணப்பட்டன. இவை 40 அடி கொள்கலன்கள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட் இராச்சியத்திலிருந்து கொண்டுவரப்பட்ட 4 வகையான சிகரெட்டுகளின் மொத்த எடை 1,650 கிலோ கிராம் ஆகும். இவற்றின் மொத்த தொகை 61,092,510 ரூபா என்று சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.



