27 நாட்களுக்குள் 2770 முறைப்பாடுகள் – சுயாதீன தேர்தல் ஆணைக்குழு

233 0

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவிற்கு 27 நாட்களுக்குள் 2770 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 8 ஆம் திகதி முதல் நேற்று மாலை 4 மணிவரையான 27 நாட்களுக்குள் 2770 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1907 முறைப்பாடுகளும், தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 863 முறைபாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் தேர்தல் சட்டத்திட்டங்களை மீறியதாக 2651 முறைப்பாடுகளும், தேர்தல் தொடர்பான ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பில் 95 முறைப்பாடுகளும், தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 24 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை பெப்ரல் அமைப்பிற்கு நேற்ற மாலை 4.30 மணியிலிருந்து இன்று மாலை 4.30 வரையான காலப்பதுதியில் 256 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இதில் 193 முறைப்பாடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் , 63 முறைப்பாடுகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுவரையில் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 385 முறைப்பாடுகளும் , சட்டமீறல்கள் மற்றும் ஏனைய குற்றச்செயல்கள் தொடர்பில் 412 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

32 பாரிய குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளதுடன் இதனூடாக 36 சட்டமீறல்கள் இடம்பெற்றுள்ளன. வன்முறைகளின் போது காயமடைந்த நிலையில் 13 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.