துருக்கியின் எதிர்கட்சிக்கு சொந்தமான பத்திரிகை ஒன்றின் பிரதம ஆசிரியர் உள்ளிட்ட பலர் கைது

387 0

துருக்கியின் எதிர்கட்சிக்கு சொந்தமான பத்திரிகை ஒன்றின் பிரதம ஆசிரியர் உள்ளிட்ட பல பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜுலை மாதம் துருக்கியில் இடம்பெற்ற தோல்வியடைந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த இராணுவ ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தொடர்பில் ஏற்கனவே கடந்த மூன்று மாதங்களில் 37 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 1 லட்சம் பேர் வரையில் அரச பணிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

நேற்றையதினமும் 10 ஆயிரம் அரச பணியாளர்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.