ரணிலின் கூட்டத்தில் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள்!

445 0

வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா வர்த்தக சமூகத்தினர், மற்றும் ஏனைய தரப்புகளுடனான கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் நேற்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் அமைச்சர்களான ராஜித, ரவிகருணாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த கூட்டத்தில் ஜரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இருவர் வருகை தந்திருந்ததுடன், கூட்டம் நிறைவுறும் வரையில் அவர்கள் அங்கு தங்கியிருந்தனர்.

குறித்த இருவரும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வவுனியாவில் தங்கியிருப்பதுடன்,ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக  பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடலை மேற்கொண்டு வருகின்றனர்.