கொழும்பு, தெஹிவளை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் முகநூலூடாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட 100 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் 17 பெண்கள் உள்ளடங்குவதாகவும், இதன்போது சுமார் 4 கிராம் கேரள காஞ்சாவை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த விருந்துபசார நிகழ்வில் போதைப்பொருள் பாவனை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

