சொகுசு வாகனங்களுக்கு புதிய வரி

310 0

சொகுசு வாகனங்களுக்காக அரசாங்கம் புதிய வரி ஒன்றை விதித்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் சிறிய வாகனங்களின் வரியை குறைத்துள்ளதாக தவறான செய்தி பரவி வருவதாக அந்த சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு பாதீட்டு யோசனையின் கீழ் அறவிடப்பட்ட சொகுசு வாகன வரி , சிறிய ரக வாகனங்களுக்கு அறவிடப்படாது என கடந்த 29 ஆம் திகதி நிதி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டிருந்தது.

அதில், சொகுசு கார் மற்றும் ஜீப் வாகனங்களுக்கு மாத்திரமே இந்த வரி அறவிடப்படும் எனவும், சிறிய ரக வாகனங்களுக்கு அது அறவிடப்படாது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேபோல், வேன் , தனி கெப் வாகனம், இரட்டை கெப் வாகனம் ( டபல் கெப்) மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகிய வாகனங்களுக்கு இந்த சொகுசு வரி அறவிடப்படாது என நிதி அமைச்சு அறிவித்திருந்தது.

மேலும், Toyota Vitz, Suzuki Every, Toyota Roomy, Suzuki Alto, Suzuki Baleno, Daihatsu Petrol, Honda Grace, Suzuki Wegon R, Toyota Aqua ஆகிய மாதிரி வாகனங்களுக்கும் இந்த வரி அறவிடப்படாது எனவும் நிதி அமைச்சு குறிப்பிட்டிருந்தது.

மேலும், Axio, Premio மற்றும் Allion மாதிரி வாகனங்களுக்கும் இந்த வரி அறவிடப்பட மாட்டாது.

எவ்வாறாயினும், அரசாங்கம் சொகுசு வாகனங்களுக்கு புதிய வரியொன்றை அறவிட்டு அதற்குள் சிறிய ரக வாகனங்கள் அடங்காது என அறிக்கை வௌியிட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.