கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெறும் சட்ட முரணான சம்பவங்கள் குறித்து கண்டறிய இரு ரோபோ இயந்திரங்கள் பயன்பாட்டில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டிலிருந்து சட்டவிரோத நாட்டுக்குள் எடுத்துவரப்படும் போதைப் பொருட்கள் மற்றும் வெடிபொருட்கள் என்பவற்றை மிக நுட்பமாக கண்டறியும் மோப்ப சக்தி இந்த ரோபோக்களுக்கு உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நேற்று (01) முதல் செயற்பாட்டில் பொருத்தப்பட்டுள்ள இந்த ரோபோக்களின் பெறுமதி 16 கோடி ரூபா எனவும் கூறப்படுகின்றது. இந்த இரு ரோபோக்களும் சீனாவிடமிருந்து இலங்கை போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

