யாழ். பாடசாலை மீது குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல்- ஐ.எஸ். பெயரில் கடிதம்

299 0

யாழ்ப்பாணத்திலுள்ள வேம்படி மகளிர் பாடசாலையின் மீது நவம்பர் மாதத்துக்குள் குண்டுத் தாக்குதல் நடாத்தப்படும் என தெரிவித்து, கடந்த 31 ஆம் திகதி அப்பாடசாலையின் முன்னாள் அதிபரின் பெயருக்கு கடிதமொன்று கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் பெயரில் இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த அதிபரின் வீட்டுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை வாசித்துப் பார்த்த அதிபரின் மனைவி, பாடசாலையின் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் இன்றைய நாளிதழொன்று அறிவித்துள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட கடிதம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.