குவைத் செல்லும் பணிப்பெண்களிற்கு காத்திருக்கும் புதிய ஆபத்து- அடிமைகளாக சமூக ஊடகங்கள் மூலம் விற்பனை

295 0

பணிப்பெண்களை சமூக ஊடங்கள் மூலம் அடிமைகளாக விற்க முயன்ற நபர்களை விசாரணைகளிற்கு வருமாறு குவைத் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

பிபிசியின் அராபிய செய்தி பிரிவு  பணிப்பெண்கள் அடிமைகளாக  சமூக ஊடகங்கள் மூலமாக விற்கப்படுவதை அம்பலப்படுத்திய பின்னரேகுவைத் அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

அடிமை சந்தை குறித்த அப்ஸ் காணப்படுவதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது.

பணிப்பெண்கள் மாற்றம் ,பணிப்பெண்கள் விற்பனைக்கு போன்ற ஹாஸ்டாக்குகள் மூலமாக  பணிப்பெண்களை அடிமைகளாக விற்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக பிபிசிதெரிவித்துள்ளது.

பிபிசி இதனை அம்பலப்படுத்தியதைதொடர்ந்து இந்த வகை விளம்பரங்களை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளதாக குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடபோவதில்லைஎன  தெரிவிக்கும் சட்ட ஆவணமொன்றில் சந்தேகநபர்களை கைச்சாத்திடுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிபிசி தன்னுடன் தொடர்புகொண்ட பின்னர் இந்த விளம்பரங்களை அகற்றிவிட்டதாக இன்ஸ்டகிராம் தெரிவித்துள்ளது.

பணிப்பெண்களை அடிமைகளாக விற்கும் நோக்கத்துடன்  புதிய விளம்பரங்கள் வெளியாவதை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக  இன்ஸ்டகிராம் தெரிவித்துள்ளது.

பிபிசி குறிப்பிட்ட சட்டவிரோத நடவடிக்கையை அம்பலப்படுத்தியதன்பின்னர் பலர்இவ்வாறான விளம்பரங்களை வெளியிடுவதை நிறுத்தியுள்ளனர்.

பிபிசியின் தகவலில் இடம்பெற்றுள்ள  16 வயது யுவதியை விற்பனை செய்தார் என குற்றம்சாட்டப்பட்டுள்ள பெண்ணை விசாரணை செய்து வருவதாக  குவைத் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.பிபிசிகுறிப்பிட்ட காவல்துறைஅதிகாரியையும் விசாரணை செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.