ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரே மதாசவிற்கு ஆதரவு வழங்குவதால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாதுகாக்கப்படாது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஆகியோர் தவறான அரசியல் நிலைப்பாட்டை தற்போது கொண்டுள்ளார்கள் என எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
வியத்மக அமைப்பின் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ நிச்சயம் வெற்றி பெறுவார். தேர்தல் பெறுபேறு தமக்கு எதிராக அமையும் என்பது அறிந்து தற்போது ஐக்கிய தேசிய கட்சி போலியான குற்றச்சாட்டுக்களை முன்னிலைப்படுத்தி தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாட்டை செய்துள்ளோம்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷவை தேர்தல் கள விவாதத்துக்கு ஆளும் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அழைத்துள்ளமை நகைப்புக்குரியது. எவ்வித தேர்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்திகள் அல்லாத ஒரு தரப்பினருடன் விவாதத்தினை முன்னெடுப்பது பயனற்றது. முறையாக கொள்கைத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பொதுஜன பெரமுன தேர்தல் பிரசாரங்களை நாடு தழுவிய ரீரிதியில் முன்னெடுத்து வருகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளமையினால் அக்கட்சியின் தனித்துவம் பாதிக்கப்படும் என்று சுதந்திரக் கட்சியின் ஒரு தரப்பினர் சுயநல கருத்துக்களை குறிப்பிட்டுக் கொள்கின்றார்கள். ஆளும் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதா சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் கொள்கை என்ற கேள்வி இங்கு தோற்றம் பெறுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஆகியோர் தற்போது அரசியல் ரீதியில் தவறான நிலைப்பாட்டினை கொண்டுள்ளார்கள். சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணியமைத்து தேசிய அரசாங்கத்தினை தோற்றுவித்ததாலேயே சுதந்திர கட்சி அரசியல் ரீதியில் பலவீனமடைந் தது. சுதந்திர கட்சியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷவிற்கும் காணப்படுகின்றது. இதன் காரணமாகவே இரு தரப்பினரும் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு ஒன்றிணைந்துள்ளோம்.
பொதுஜன பெரமுனவின் தேர்தல் கொள்கை பிரகடனத்தில் நட்புறவுடனான வெளிநாட்டு கொள்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளின் அங்கீகாரம் இல்லாமல் ஒருபோதும் தனித்து செயற்பட முடியாது. இதற்காக நாட்டின் இறையாண்மையி னையும் விட்டுக்கொடுக்க முடியாது. நாட் டுக்கு பாதகமாக இதுவரையில் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் அனைத் தும் மீள்பரிசீலனை செய்யப்படும். இறை யாண்மைக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் ஒப்பந்தங்கள் முழுமையாக நிராகரிக்கப் படும் என்றார்.

