ஓய்வூதிய சம்பளத்தில் நிலவும் முரண்பாடுகளை நீக்குவதற்கான வேலைத் திட்டம் அடுத்த மாதத்தில் பூர்த்தி செய்யப்படவுள்ளது.
இதுவரையில் நான்கு இலட்சத்து 25 ஆயிரம் ஓய்வூதியகாரர்களுக்கான சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு தயாரிக்கப்பட்டிருப்பதாக ஓய்வூதிய கொடுப்பனவு பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் 80 ஆயிரம் பேருக்கான சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

