நாட்டு மக்கள் எதிர்பாக்கும் அனைத்து தகுதிகளும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் உள்ளதாக அமைச்சர் பி. ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
அநுராதபுர பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தீர்வையற்ற வாகன கொள்வனவுக்கான அனுமதி பத்திரங்களை இரத்துச் செய்வதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்து தொடர்பில் அமைச்சர் ஹெரிசனிடம் வினவப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்ட கருத்துக்களை கூறியதுடன், சஜித் பிரேமதாச ஜனாதிபதியாவது நாட்டை அபிவிருத்தி செய்வதற்கே எனவும் அது தொடர்பில் நாட்டு மக்கள் அறிந்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிச் செய்வதற்கு மற்றைய கட்சிகளின் உறுப்பினர்களும் ஒன்றிணைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

