மத்­திய மாகாண தமிழ் பாட­சா­லை­களை மூடு­மாறு இராதாகிருஷ்ணன் ஆளு­ந­ரிடம் கோரிக்கை

341 0

மத்­திய மாகாண தமிழ் பாட­சா­லை­க­ளுக்கு எதிர்­வரும் 28ஆம் திகதி விடு­முறை வழங்­கு­மாறு மத்­திய மாகாண ஆளுநர் ரஞ்சித் தென்­ன­கோ­னிடம் மலை­யக மக்கள் முன்­ன­ணியின் தலை­வரும் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் பிரதி தலை­வரும் விசேட பிர­தே­சங்­க­ளுக்­கான அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

இது தொடர்­பாக கருத்து தெரி­வித்த அமைச்சர்,

தீபா­வளி பண்­டி­கை­யா­னது ஞாயிற்­றுக்­கி­ழமை (27) அன்று கொண்­டா­டப்­ப­ட­வுள்­ளது. மறுநாள் 28ஆம் திகதி மத்­திய மாகாண தமிழ் பாட­சா­லை­க­ளுக்கு விடு­முறை பெற்றுத் தரு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஆசி­ரி­யர்­களும் பெற்­றோர்­களும் விடுத்த வேண்­டு­கோ­ளுக்கு இணங்­கவே இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

அநே­க­மான பாட­சா­லை­களில் தீபா­வளி தினத்தின் மறுநாள் மாண­வர்­களின் வருகை மிகக்குறை­வா­கவே காணப்­படும். இதன் கார­ண­மாக அன்­றைய தினம் பாட­சாலை நட­வ­டிக்­கை­களை முழு­மை­யாக முன்­னெ­டுக்க முடி­யாது.

ஆகவே அன்­றைய தினம் பாட­சா­லை­க­ளுக்கு விடு­மு­றை­யினை அறி­வித்து மீண்டும் விடு­முறை நாட்­க­ளான சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையில் குறித்த விடுமுறை தின கல்வி நடவடிக்கையினை முன்னெடுக்க முடியும் என மேலும் தெரிவித்தார்.