எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் என்று தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
இதன் பின்னர் தபால் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் நவம்பர் மாதம் 09 ஆம் திகதிக்குள் அனைத்து வாக்காளர்களுக்கும் விநியோகிக்கப்படும்.
குறித்த திகதிக்குள் வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் சம்பந்தப்பட்ட தபால் திணைக்களங்களுக்கு சென்று தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்.
இதேவேளை தபால் மூல வாக்குப்பதிவு இம் மாதம் 31 ஆம் திகதியும் நவம்பர் மாதம் மற்றும் முதலாம் திகதியும் நடைபெறும்.
நவம்பர் 16 ஆம் தேதி ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை நவம்பர் 6 ஆம் தேதிக்கு முன்னர் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சுமார் 17 மில்லியன் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படும்.
இந் நிலையில் எதிர்வரும் 06 ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகளை பூர்த்தி செய்யவுள்ளதாகவும் அரச அச்சக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இம்முறை வாக்குச் சீட்டின் நீளம் 26 அங்குலம் என்பதுடன், 17 மில்லியன் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

