தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை விஷேட விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருப்பதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தமிழர்களின் பாரம்பரியத்தின் வெளிப்பாடாக எமது பெருந்தோட்ட மக்களினால் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகின்ற தீபாவளி பண்டிகையானது இவ்வருடம் விடுமுறை நாளில் கொண்டாடப்படவுள்ளது. இதனால் எமது பெருந்தோட்ட மாணவச் செல்வங்களின் விஷேட நலன்கருதி 28ஆம் திகதி திங்கட்கிழமையினை விசேட விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என ஊவா மாகாண ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளேன்.
இவ்விடயம் தொடர்பில் ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவுடன் கலந்துரையாடியதற்கு அமையவே பண்டிகை தினத்திற்கு மறுநாள் பாடசாலை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 2ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

