ஜெனரல் ஜெரி டி சில்வா எழுதிய புத்தகத்தை வெளியிட்டு வைத்தார் மகிந்தராஜபக்ஷ!

317 0

சிறீலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் ஜெரி டி சில்வா எழுதிய ‘நடவடிக்கையில் கொல்லப்பட்ட போர்வீரர்கள்’ என்ற நூல் நேற்று முன்தினம் கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற இந்நிகழ்வில், சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு இந்நூலினை வெளியிட்டுவைத்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட முன்னாள் இராணுவத் தளபதிகள், கடற்படைத் தளபதிகளும் கலந்துகொண்டனர்.

இருப்பினும், தற்போதைய அரசில் அங்கம் வகிக்கும் இராணுவத் தளபதிகளோ, அரச அதிகாரிகளோ கலந்துகொள்ளவில்லை.

அண்மையில் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே ஆகியோரின் நூல்கள் வெளிவந்துள்ள நிலையில், முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெரி டி சில்வா எழுதிய நூலும் வெளியாகியிருக்கிறது.

‘நடவடிக்கையில் கொல்லப்பட்ட போர்வீரர்கள்’ என்ற நூலை ஜெனரல் ஜெரி டி சில்வா 1994ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து 1996ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதிவரை இராணுவத் தளபதியாகக் கடமையாற்றினார். இவரது காலத்திலேயே சிறீலங்கா இராணுவத்தினர் ரிவிரச இராணுவ நடவடிக்கை மூலம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர்.

war-heroes-killed-in-action-by-general-gerry-de-silva-2

war-heroes-killed-in-action-by-general-gerry-de-silva-3

war-heroes-killed-in-action-by-general-gerry-de-silva-4