கலேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியல் வீடொன்றில் தனித்து வசித்து வந்த பெண்னொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கலேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலக்கம் 2 பத்கொலகொல்ல பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த 65 வயதுடைய பெண்ணின் மகள் , தனது தாய் தனித்து வசித்து வந்ததாகவும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கலேவெல பொலிஸாருக்கு முறைப்பாடளித்துள்ளமைக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

