வசீம் தாஜுதீனின் வழக்கு நவம்பர் வரை ஒத்திவைப்பு

370 0
வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சாட்சியங்களை வேண்டுமென்றே மறைத்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை நவம்பர் 23 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி விகும் களுஆராச்சி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பிரதிவாதியான அநுர சேனாநாயக்க நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார்.

இதன்போது பிரதிவாதி சார்ப்பில் நீதிமன்றதில் ஆஜரான சட்டத்திரணி, தனது கட்சிக்காரர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் குறித்த வழக்கை இரத்து செய்து மீள விசாரணைக்கு எடுக்கும் தினத்தை அறிவிக்குமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி குறித்த வழக்கை நவம்பர் 7 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.