சிவனொளிபாதமலையில் சுற்றுலா விடுதி பிரதேசத்திற்கு அச்சுறுத்தல்

302 0

 

sivanolipathamalai-dசிவனொளி பாதமலை பகுதியில் கட்டப்பட்டு வரும் சுற்றுலா விடுதியினால் அப்பிரதேசத்துக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து சுற்றாடல் துறை அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் மிக விரைவில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த சுற்றுலா விடுதி நீர் வீழ்ச்சி உருவாகும் இடத்துக்கு மேல் பகுதியில் அமையவுள்ளது. இதனை அமைப்பதனால், அங்குள்ள தாவரங்கள், மிருகங்களுக்கு பாதிப்பாக அமையும் என சுற்றாடல் பிரிவு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தனியார் ஒருவருக்குச் சொந்தமான இடம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பகுதி பாதுகாப்பான மண் உள்ள வனப்பகுதி என கடந்த 2008 ஆம் ஆண்டு மே 22 ஆம் திகதி அரச வர்த்தமானியில் பதிவாகியுள்ளது.

இதனால், இப்பிரதேசத்தில் இந்த சுற்றுலா விடுதியை அமைப்பதில் பல்வேறு சூழல் அச்சுறுத்தல்கள் ஏற்படும் என சுற்றுச் சூழல் ஆய்வாளர் ஜகத் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.