3 தொகுதி தேர்தல்: தே.மு.தி.க., வேட்பாளர்கள் அறிவிப்பு

311 0

tamil_news_large_1637983_318_219திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பணப்பட்டுவாடா புகார் காரணமாக அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூரில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியாக காலியாக உள்ளது. இங்கு வரும் நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு தி.மு.க., அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன. வேட்பு மனு தாக்கல் துவங்கி நடந்து வருகிறது. அங்கு திமுக.., மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்தை துவக்கியுள்ளனர். சிலர் சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், இங்கு போட்டியிட தே.மு.தி.க., முடிவு செய்துள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியலையும் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதன்படி, அரவக்குறிச்சியில் அரவை எம். முத்துவும், திருப்பரங்குன்றத்தில் தனபாண்டியன், தஞ்சாவூரில் அப்துல்லா சேட் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அக்கட்சி தலைவர் அறிவித்துள்ளார்.