சிறுபான்மை கட்சிகளின் நிபந்தனைகளுக்கு கீழ்ப்படிந்து அரசாங்கம் செயற்பட்டதில்லை – ரவி

200 0

சிறு­பான்மை கட்­சி­களின் நிபந்­த­னை­க­ளுக்கு கீழ்ப்­ப­டிந்து அர­சாங்கம் ஒரு­போதும் செயற்­பட்­ட­தில்லை. அனைத்து இன மக்­களும் ஒரு தாய் மக்­க­ளாக வாழ­வேண்டும் என்­பதே எமது நோக்கம் என்று அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்தார். கொழும் பில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

அர­சாங்கம் சிறு­பான்மை மக்­களின் தேவைக்­கேற்ற முறையில் செயற்­ப­டு­வ­தில்லை. சிறு­பான்மை கட்­சி­களின் நிபந்­த­னைக்கு கீழ்ப்­ப­டிந்து செயற்­ப­டு­வதும் இல்லை. அர­சாங்கம் சிறு­பான்மை  கட்­சி­களின் நிபந்­த­னை­க­ளுக்கு கீழ்ப்­ப­டிந்து வாக்­கு­களை பெற்­றுக்­கொள்­வ­தாக எதி­ரணி பொய்ப் பிர­சாரம் மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றது. 2015இல் நாங்கள் அதி­கா­ரத்­துக்கு வரும்­போதும் இந்த குற்­றச்­சாட்­டையே அவர்கள் தெரி­வித்து வந்­தனர். ஆனால் இது­வரை நாட்­டுக்கு தீங்­கான ஏதா­வது இடம்­பெற்­றி­ருக்­கின்­றதா?, சிறு­பான்மை மக்­க­ளுக்கு தேவை­யான முறையில் செயற்­பட்­டதா? எது­வுமே இடம்­பெ­ற­வில்லை.

மேலும் எமக்கு தேவை­யாக இருப்­பது ஒற்­று­மை­யாகும். சிங்­கள, தமிழ், முஸ்லிம், பேகர் மற்றும் மலாய் என அனைத்து இன மக்­களும்  இது எனது நாடு என பெரு­மை­யுடன் வாழக்­கூ­டிய நாடே எமக்கு தேவை. பெளத்­தத்­துக்கு முன்­னு­ரிமை வழங்கி ஏனைய மதங்­களுக்கு சம உரிமை வழங்கி செயற்­படும் நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு வதே எங்­க­ளுக்கு தேவை­யாக இருக்­கின்­றது.

அத்­துடன் எமது எதிர்த்­த­ரப்­பினர் எமக்கெ­ தி­ராக என்ன விமர்­ச­னங்­களை முன்­வைத்­தாலும் நாங்கள் 5 வரு­டங்கள் ஆட்­சியை கொண்டு செல்­கின்றோம். இது­வரை காலத் தில் நாட்டின் ஒரு அங்­கு­ல­மேனும் இல்­லா­மல் ­போ­யி­ருக்­கின்­றதா? வேறு ஏதாவது நட்டம் ஏற்பட்டிருக்கின்றதா? நாங்கள் ஒரு போதும் நிபந்தனைகளுக்கு கீழ்ப் படிந்து செயற்படுவதில்லை. அவ்வாறு செயற்படு வதற்கு எமக்கு எந்த தேவையும் இல்லை என்றார்.