யாழ். மாவட்டத்தில் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

414 0

யாழ். மாவட்டத்தில் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் இந்த புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

51,000 மில்லியன் ரூபாய் செலவில் வீதிகளை புனரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய யாழ்ப்பாணத்திலுள்ள 343 வீதிகளின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1034.18 கிலோமீட்டர் வீதி முழுமையாக புனரமைக்கப்படவுள்ளதாக வட மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.