இலங்கையில் தமிழ் இணையத்தளம் முடக்கப்பட்டது.

284 0

internet_keyboar-100008909-large1ஊடகத்துறை அமைச்சின் முறைப்பாட்டை அடுத்து தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு, நேற்று முதல் தமிழ் இணையத்தளம் ஒன்றை முடக்கியுள்ளது.

தொலைத்தொடர்புகள் ஓழுங்கமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் சுனில் சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த இணையத்தளம் பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டதுடன், நீதிமன்ற தீர்ப்புக்கள் மற்றும் நீதிபதி, சட்டத்தரணிகளை விமர்சனம் செய்யும்வகையில் செயற்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா டெலிகொம் சேவை வழங்குநரின் பயன்படுத்தி வந்த இந்த இணையத்தளம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சும், ஊடக அமைச்சும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளன.

எனவே இந்த விசாரணைகளை முடியும் வரை குறித்த இணையத்தளத்தின் முடக்கம் அமுலில் இருக்கும் என்று தொலைத்தொடர்புக்கள் ஓழுங்கமைப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கம் பதவியேற்றப்பின்னர் முடக்கப்படும் முதலாவது இணையத்தளமாக இது அமைந்துள்ளது.