நாவலபிட்டியில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து

227 0

நாவலபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டி, நாவலபிட்டி பிரதான வீதியின் நாவலபிட்டி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (16) இரவு 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

குறித்த பகுதியில் உள்ள வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் வாகனங்களுக்கு பயன்படுத்தபடும் எண்ணெய் வர்த்தக நிலையமே இவ்வாறு தீ பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் எரிந்து சாம்பளாகியுள்ளதாகவும் தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறிய படவில்லை எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

நாவலபிட்டி பொலிஸார் மற்றும் அயலவர்கள் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.