தான் ஜனாதிபதியான பின்னர் மிளகு மறு ஏற்றுமதியை நிறுத்தி மிளகு விவசாயிகளுக்கு நிலையான விலையினை பெற்றுத் தருவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
குருணாகலை தொடம்கஸ்லந்த பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சிறு ஏற்றுமதி பயிர் செய்கையில் மிளகு சாகுபடியில் ஈடுபடும் அனைத்து விவசாயிகளுக்கும் ஒரு நிலையான விலையினை பெற்றுத் தருவதாக தெரிவித்தார்.
தான் எச்சந்தர்ப்பத்திலும் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க முயற்சிப்பது இல்லை எனவும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

