இந்த அரசை சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டிள்ளது – ஜனா

318 0

img_2188ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு பவருடங்கள் கழிந்த நிலையிலும், இராணுவத்தினரின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படவில்லை, சிறையிலே வாடும் கைத்திகள் விடுதலை செய்யப்படவில்லை, தென்பகுதியை திருப்திப்படக்கூடிய அளவிற்குத்தான் இந்த அரசின் செயற்பாடுகள் போய்க் கொண்டிருக்கின்றன இந்நிலையில். இந்த அரசை சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டிள்ளது.

என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட மட்.களுதாவளை மகாவித்தியாலய மாணவன் ஜெயரெட்ணம் ரிசானன் இரண்டு தங்கப்பதக்கங்களையும், கே.சந்திரகுமார் என்ற மாணவன் வர்ண சான்றிதழையும் பெற்று பாடசாலைக்கும், கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்ததைக் கௌரவிக்கும் நிகழ்வு, களுதாவளை கலாசார மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இதன்போது கலந்து கொண்டு மாணவர்களைக் கௌரவித்துவிட்டு, கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தமிழ் மக்கள் பொது நிகழ்வுகளை நடாத்தக்கூடிய சூழல் இருக்கவில்லலை, எதிர் காலத்தில் தமிழ் மக்களின் பிரதேசங்கள் சுயமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறக்கூடிய முறையாக மைதான ஒழுங்குகள் உள்ளிட்ட வசதி வாயப்புக்கள் இல்லை இவ்வாறான நிலையிலும்கூட களுதாவளையைச் சேர்ந்த ரிசானன் இரண்டு, தங்கப் பதக்கங்களை தேசிய மட்டத்தில் வென்றெடுத்துள்ளான். எதிர் காலத்தில் முறையான பயிற்சிகள், மைதான ஒழுங்குகள் அனைத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் பல மாணவர்கள் தேசிய மட்டத்தில் தங்கப் பதக்கங்களைப் பெறுவதோடு மாத்திரமல்ல சர்வதேச மட்டத்திலே போட்டி இடும் நிலமை உருவாகும்.

இணைந்த வடகிழக்கில் நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்று ஒரு சுயாட்சியுடன் எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்குடன் கடந்த காலத்தில் இருந்த ஆட்சியை 2015 ஜனவரி 8 ஆம் திகதி வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்கள் ஒன்றிணைந்து மாற்றியுள்ளோம்.

2015 இற்கு முன்னர் வடகிழக்கை அபிவிருத்தி செய்யவதற்காக வெளிநாடுகள் கொடுத்த பணங்கள் அனைத்தும் தெற்கில் அபிவிருத்திக்காக மாற்றப்பட்டிருந்தன அந்நிலமை தற்போது மாற்றம் பெற்று எமது பிரதேசங்களும் அபிவிருத்திகாண வேண்டும் என்ற நோக்குடன்தான் இந்த புதிய ஆட்சியை நாம் கொண்டு வந்துள்ளோம்.

தற்போதைய அரசு நாடாளுமன்றத்தை ஒரு அரசியல் சபையாக மாற்றி பழைய தேர்தல் முறையைக் கொண்டுவருதல், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையைக் இல்லாமல் செய்தல், புரையோடிப் போயள்ள அரசியல் பிரச்சனைக்குத் தீர்வுகாணுதல், போன்ற மூன்று விளையங்களையும் உள்ளடக்கியுள்ளது.

ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு பவருடங்கள் கழிந்த நிலையிலும், இராணுவத்தினரின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வில்லை, சிறையிலே வாடும் கைத்திகள் விடுதலை செய்யப்பட வில்லை, தென்பகுதியை திருப்திப்படக்கூடிய அளவிற்குத்தான் இந்த அரசின் செயற்பாடுகள் போய்க் கொண்டிருக்கின்றன இந்நிலையில். இந்த அரசை சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டிள்ளது.

கடந்த காலங்களில் கெட்டுப்போயுள்ள இலங்கையின் பெயரை சர்வதேச மட்டத்தில் நற்பெயர் வாங்குவதற்கும், ஜி.எஸ்.பி. பிளஸ் போன்றவற்னைப் பெற்றெடுக்கும் நோக்குடன்தான் இந்த அரசு செயற்படுகின்றதே தவிர அரசியல் தீர்வுக்கான செயற்பாடுகள் ஒன்றையும், இந்த அரசிடம் காணவில்லை.

மன்னாருக்கும், இராமேஸ்வரத்திற்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு இந்தியா எவ்வளவோ முயற்சி எடுத்தாலும், இலங்கை அரசாங்கம் அதற்குத் தடை போடுகின்றது. இவ்வாறு பாலம் அமைந்தால் அதனை நான் குண்டு வைத்து தகர்ப்பேன் என்று இலங்கை நாடாளுமன்றதிலே இருக்கினற் முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறுகின்றார்.

அவர் எப்படியான பயங்கரவாதியாக இருக்கின்றார் என்பதை நாம் உணர வேண்டும். இந்த நாடு நாலாபக்கமும் அபிவிருத்தி அடைய வேண்டுமாக இருந்தல், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் தரை வழிப்பாதை ஒன்று ஏற்பட வேண்டும். இவ்வாறு அது ஏற்பட்டால் ஐரோப்பா வரைக்கும் தரை வழிப்பாதையுடாகச் செல்லலாம். என அவர் தெரிவித்தார்.

img_2193 img_2054 img_2065 img_2084 img_2097 img_2099 img_2125 img_2188 img_2190 img_2193 img_2217 img_2226 img_2227 img_2234