புதிய கல்வி முறை நாட்டிற்கு தேவை!

229 0

மாணவர்களுக்கு மாத்திரம் அல்லாமல் ஆசிரியர்களுக்கும் கல்வி தொடர்பில் அவதானம் செலுத்தக்கூடிய கல்வி முறை நாட்டிற்கு தேவை என மக்கள் தேசிய சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் தேசிய சக்தியின் கல்விக் கொள்கையை வெளியிடும் நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பாவிப்பவர்களின் நூற்றுக்கு 78 வீதமானோர் சாதாரண தர பரீட்சை சித்தியடையாதவர்கள் எனவும் சிறைச்சாலையில் உள்ளவர்களில் நூற்றுக்கு 60 வீதமானோர் சாதாரண தர பரீட்சை சித்தியடையாதவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாணவர்களுக்காக கல்வி செலவை பெற்றோர்கள் மீது சுமத்தாது அரசாங்கம் பொறுப்பொடுப்பதற்கான நடவடிக்கை எடுப்பதே எமது கொள்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.