7 பாடசாலைகள் தேசிய பாடசாலையாக தரமுயர்வு!

212 0

குளியாப்பிட்டி சாராநாத் வித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகிலவிராஜ் காரயவசத்தின் ஆலோசனைக்கு அமைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனுடன் பொலநறுவை மாவட்டத்தில் திபுலாகல விலாலய மத்திய மகா வித்தியாலயம், தோபாவௌ மத்திய மகா வித்தியாலயம், திவுலன்கடவல மத்திய மகா வித்தியாலயம், பக்கமுனா மஹாசென் மகா வித்தியாலயம், பொலநறுவை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயம் மற்றும் அம்பாறை உஹண மத்திய வித்தியாலயம், ஹம்பா ஹேனேகம மத்திய மகா வித்தியாலம் ஆகியவை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாகாண சபைக்கு உட்பட்ட அரசாங்க பாடசாலைகள் தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு பூர்த்தி செய்யவேண்டிய விடயங்களை அடிப்படையாக கொண்டு இந்த பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.

இதற்கு அமைவாக வலயக்கல்வி பணிப்பாளர், மகாண கல்வி பணிப்பாளர் மற்றும் ஆளுநர்களின் உடன்பாடுகளுடன் ஒவ்வொரு பாடசாலையிலும் சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களின் உடன்பாட்டிற்கு அமைவாக இந்த பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏதேனும் காரணத்தின் அடிப்படையில் இந்த பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மத்திய அரசாங்கத்தினால் பொறுப்பேற்பது தொடர்பில் உடன்பாடு தெரிவிக்காமல் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் எதேனும் பாடசாலைகளில் இருப்பார்களாயின் அவ்வாறானோர் 3 வருட சேவைக்காலத்திற்கு பின்னர் மாகாண அரச சேவைக்குள் உள்வாங்கப்படுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக தேசிய பாடசாலை பட்டியலில் இடம்பெறும் இந்த பாடசாலைகளுடன் தற்பொழுது இலங்கையில் பாடசாலை வலைப்பின்னலுக்குள் நடத்தப்படும் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை 370 ஆக அதிகரித்திருப்பதாக கல்வி அமைச்சு அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.