இம்முறை ஜனாதிபதித் தேர்தல் ஒரு கிரிக்கெட் போட்டியைப் போன்றதுதான். இதில் வெற்றிபெறச் செய்யவேண்டியது ஒரு குடும்பத்தையா அல்லது நாட்டையா என்ற தீர்மானத்தை மக்கள் மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையை மற்றுமொரு சேர்பியா போன்று மாற்றுவதாயின், அதன் தலைவராக அமெரிக்காவின் உற்பத்தியொன்றைத் தெரிவுசெய்ய வேண்டுமெனின் தாமரை மொட்டிற்கு வாக்களிக்கலாம்.
மாறாக எமது நாட்டை சிங்கப்பூர் போன்று மாற்றுவதற்கும், அதன் தலைவராக இலங்கையின் பிரஜையொருவரைத் தெரிவுசெய்வதற்கும் அன்னத்திற்கு வாக்களிக்கலாம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும், கல்வி அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயகக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் முதலாவது தேர்தல் பிரசாரக்கூட்டம் வியாழக்கிழமை கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பமானது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
இன்று காலிமுகத்திடல் மாத்திரமல்லாது கொழும்பில் பல பாகங்களும் சஜித் பிரேமதாஸவின் ஆதரவாளர்களினால் நிறைந்திருக்கிறது. வெற்றியை நோக்கிய எமது போராட்டம் இப்போது தான் ஆரம்பமாகின்றது. இது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு பாரிய சவாலாக அமையும் அதேவேளை, எமது போராட்டமும் சஜித்தின் வெற்றியுடன் தான் முடிவிற்குவரும் என அவர் நேற்று நடைபெற்ற பிராச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

