கம்பஹா மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு நீர் வெட்டு

295 0

இன்று (08) முற்பகல் 8 மணி தொடக்கம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கம்பஹா மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

களனி கங்கை தெற்கு கரைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின், நீர் குழாய் அமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள மேம்படுத்தல் பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகத் தடைச் செய்யப்படவுள்ளது.

அதன்படி, பெஹலியகொடை, வத்தளை, மாபோல, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவை நகர சபைக்குட்பட்ட பிரதேசங்கள், களனி, பியகம, மஹர, தொம்பே மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

நீர் விநியோக தடை காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியம் காரணமாக தமது வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.