ரயில்வே ஊழியர்களின் 12 நாள் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நேற்று மாலை கைவிடப்பட்ட நிலையில் இன்று ரயில்வே சேவைகள் அனைத்தும் வழமைக்கு திரும்பியுள்ளது.
ஜனாதிபதி , போக்குவரத்து அமைச்சர் , சம்பள நிர்ணய சபையின் தலைவர் ஆகியோருடன் ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்தே வேலை நிறுத்த போராட்டம் நேற்று கைவிடப்பட்டது.
நேற்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் வாசஸ்தலத்தில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை முடித்து கொண்ட ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரனதுங்க சம்பள நிர்ணய சபையின் தலைவர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்தே வேலை நிறுத்தத்தை கைவிடுவதென அவர்கள் தீர்மானித்தனர்.
பொது மக்களை இன்னல்களுக்கு ஆளாக்காத வகையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்படுவது அனைத்து தொழிற்சங்கங்களினதும் பொறுப்பாகும். எந்தவொரு பிரச்சினையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடியும். ஜனாதிபதி என்ற வகையில் வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்விடயத்தில் கோரிக்கைகள் தொடர்பாக தீர்வுகளை பெற்றுக் கொடுப்பேன் என்று இந்த சந்திப்பில் ஜனாதிபதி கூறினார்.
ஜனாதிபதியுடன் பேச்சுவார்தையை முடித்து கொண்ட ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதமியின் ஆலோசனையின் பேரில் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரனதுங்க சம்பள நிர்ணய சபையின் தலைவர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.இதனை அடுத்தே வேலை நிறுத்தத்தை கைவிடுவதென அவர்கள் தீர்மானித்தனர்.
கடந்த 12 தினங்களாக ரயில்வே ஊழியர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தம் காரணமாக அரச தனியார் துறை ஊழியர்களும் , பாடசாலை மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

