35 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்

312 0

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்புமனு தாக்கல்  இன்று (07) இடம்பெற்ற நிலையில், 35 வேட்பாளர்கள் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.

ராஜகிரிய மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் வாகன போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

காலை 9 மணிமுதல் 11 மணிவரையான காலத்தில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தம் 41 பேர் கட்டுப்பணம் செலுத்திய போதும், அதில் ஆறுபேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவில்லை என, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளனர்.

வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருந்தன.