12 ஆவது நாளாகவும் தொடரும் ரயில்வே தொழிற்சங்க போராட்டம்

201 0

ரயில் சேவையானது அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள நிலையிலும், இன்றைய தினம் 12 ஆவது நாளாகவும் ரயில்வே தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

எனினும் இப் போராட்டத்துக்கு மத்தியலும் 12 புகையிரதங்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக ரயில்வே கட்டுப் பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இந் நிலையில் ரயில் சாரதிகள் மற்றும் நிலைய அதிபர்களாக இராணுவ வீரர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதி போக்குவரத்து அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி 3 கட்டங்களாக இராணுவ வீரர்களுக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.