வடக்கின் நிலமையை ஆராய அமெரிக்க பிரதித் தூதுவர் யாழ். பயணம்!

301 0

jaffna-bishop-robert-hiltonவடக்கின் நிலமைகள் தொடர்பாக ஆராய்வதற்கு அமெரிக்கப் பிரதித் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் நேற்று (வெள்ளிக்கிழமை)   யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்து யாழ். ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தினார்.

கடந்த 21ஆம் திகதி பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமையைத் தொடர்ந்து வடக்கு மாகாணத்தில் குழப்ப நிலை உருவானது.

இந்த நிலையிலேயே கொழும்பிலுள்ள அமெரிக்க பிரதி தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் நேற்று யாழ்ப்பாணம் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.

அவர் நேற்று ஆயர் இல்லத்தில் ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது நல்லிணக்கத்தில் கிறிஸ்தவ மதத்தின் பங்களிப்புக் குறித்தும் பேச்சுவார்த்தை நடாத்தினார்.

அத்துடன் வடக்கின் தற்போதைய நிலமை தொடர்பாகவும் அமெரிக்கப் பிரதித் தூதுவர் கேட்டறிந்துகொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.