8 ஆவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்………..

297 0

ரயில்வே ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு எட்டாவது நாளாக இன்றும் தொடருகிறது.

இந்நிலையில் இன்று காலை 13 ரயில்களை கொழும்பு கோட்டை ரயில் நிலையம் வரையில் சேவையில் ஈடுபடுத்த முடிந்ததாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலி கண்டி குருநாகல் அவிசாவளை ஆகிய இடங்களிலிருந்து இந்த ரயில்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன.

இதேவேளை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோருக்கு அரசாங்கத்தினால் இறுதி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அறிவிக்காமல் சேவைக்கு சமூகமளிக்காத ரயில் ஊழியர்களை சேவையில் இருந்து விலகியவர்களாகக் கருதி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்ஹ தெரிவித்தார்.

பயணிகள் எதிர்கொண்டுள்ள சிரமங்களை கருத்திற்கொண்டு இன்று முதல் பொறியியலாளர்களை ஈடுபடுத்தி ரயில் சேவையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.