எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடாவிட்டால் நான் நாளை கட்டுப் பணம் செலுத்துவேன் என அக் கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
இன்று காலை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த முடிவினை அறிவித்துள்ளார்.
குமார வெல்கம அண்மையில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டமைக்கு கடும் அதிருப்தியை தெரிவித்திருந்ததுடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்குவதாக தீர்மானித்தால் அரசியல் ரீதியில் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வேன். அது எவரும் எதிர்பார்க்காததாக அமையும் என அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

