ரணசிங்க பிரேமதாசவுடன் முடிவுக்கு வந்த எமது ஜனாதிபதி தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாசவிடம் இருந்து மீண்டும் உருவாக்க வேண்டும், அதற்காக நாம் அனைவரும் கைகோர்த்து செயற்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேலைத்திட்டம் குறித்து கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று காலை இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் வேளையில் அவர் இதனை குறிப்பிட்டார்.
எமது ஆட்சியில் நாம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களை தக்கவைக்க மீண்டும் எமது அரசாங்கத்தை உருவாக்குவதுடன் அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தை வீழ்த்த முடியாத நிலைமையை உருவாக்க வேண்டும் என்றும் அவர் இதன்போது கூறினார்.

