2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி வரை தபால் மூலம் வாக்களிப்புக்கான விண்ணங்களை மேற்கொள்ள முடியும்.
தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை பொறுப்பேர்க்கும் பணி இன்றுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல் ஆணையம் முன்னதாகவே அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெறவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

