இகலவெவ – அதிரானி வீதியின் எப்பாவல ரத்தொட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நபர் ஒருவர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த நபர் எப்பாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
40 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் எப்பாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

